Thursday, January 31, 2008

மக்கள் வெள்ளம்





இடம் : கொங்கசன்ங்கு ரயில் நிலையம்

நன்றி : AP

Tuesday, January 29, 2008

அதிபரின் இறுதி உரை....


அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வ. புஷ்,

மக்கள் சபையில் அதிபராக தன்னுடைய இறுதி உரையை நிகழ்த்தும் முன், பார்வையாளர் வரிசையில் உள்ள ஒருவரை பார்த்து க்ண் சிமிட்டுகிறார்.....

இடம் : U.S Capitol ,வாஷிங்டன்

நன்றி : reuters

Monday, January 28, 2008

ஹாவாய் -இயற்கை உணவு


காலை உணவாக வாழை, பாப்பாளி ம்ற்றும் பாஷென் பழமுடன் கோன காப்பி
இடம் : ஹாவாய்
நன்றி : Newyork Times

Friday, January 25, 2008

எலி வருடம்

சீன புத்தாண்டு, நிலாவை மையமாக கொண்டு கணக்கிட படுகிறது. வருடந்தோறும் பிப்பரவரி மாதம் முதல் ம்ற்றும் இராண்டம் வாரம் சீன புத்தாண்டு கொண்டாடப்படும்.
சீனர்களின் இந்த வருட புத்தாண்டு எலி ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
சீன சிறுமி, எலி ஆண்டை வரவேற்க்க, எலி போன்ற தோற்றம் உடைய முள்ளாங்கி கேக்கை (cake) தயார் செய்கிறாள்.
இடம் : ஹாங்காங்,சீனா
நன்றி : China Daily

Thursday, January 24, 2008

லூசி - இயந்திர பூனை


"Village" கடையில் உள்ள புது வரவு "லூசி - இயந்திர பூனை"
இடம் : நியுயார்க் நகரம்
நன்றி : New York Times

Wednesday, January 23, 2008

ஆயுத கோட்டை


பெஷவர், ஒரு காலத்தில் புகழ்மிக்க பாரம்பாரியம் கொண்ட நகரம், இன்று தீவிரவாதிகளின் கோட்டையாக மாறியுள்ளது.

ஆயுத வியாபரமும் போதை பொருள் வியாபரமும் மிக சூடாக நடைபெறுகிறது.

இடம் : பெஷவர்(Peshwar, Pakistan)
நன்றி : New York Times

Tuesday, January 22, 2008

புதிய காவலர்கள்


புதியதாக தேர்ந்தேடுகப்பட்ட பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு தூப்பாக்கி சுடும் பயிற்ச்சி அளிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சிக்கு ஒரு எடுத்துகாட்டு.

இடம் : பொல்-ஏ கும்ரி, ஆப்கானிஸ்தான்.

நன்றி : TIMES

Monday, January 21, 2008

பங்கு சந்தை வீழ்ச்சி




மறுபடியும் பங்கு சந்தை வீழ்ந்தது, உலக அளவில் பங்கு சந்தை பலத்த சரிவை சந்தித்தது.




இந்தியா பங்கு சந்தை 7.41% வீழ்ந்தது, அதாவது ஒரே நாளில் முதாலிட்டார்களுக்கு $170 பில்லின் (ரூபாய் 6630,00,00,00,000 ) நஷ்டம் ஏற்பட்டது.


அமெரிக்காவின் மந்தமான பொருளாதாரமே இதற்கு காரணம் என்று கூறினாலும், இப்படிபட்ட பலத்த சரிவுக்கு பல காரணிகள் உள்ளது...


கவலைப்படுவதால் எதுவும் ஆகப்போவதில்லை.....


இடம் : ஜெர்மன் பங்கு சந்தை
நன்றி : Reuter


Friday, January 18, 2008

வீர விளையாட்டு


ஜல்லிகட்டு, தமிழர்களின் வீர விளையாட்டு...
இடம் : அலங்காநல்லூர்
நன்றி : தினமலர்

Thursday, January 17, 2008

பயணி..


ரிச்சாட் ஹேடொன்,வயது 41, இங்கிலாந்து பயணி.

தன்னுடைய இந்தியா பயணத்தில், கோனார்க்கில் உள்ள 13 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சூரிய கோயிலை வியந்து பார்க்கிறார்.

அவர் தனது இந்தியா பயணத்தை பற்றி கூறுகையில்

"I go to India by myself most years because I love the country. I like the history and the culture. From the photograph you get an idea of what an extraordinary structure this is, with the big wheels representing the chariot of the sun god, Surya. What’s really fascinating about India — and you really get this when you’re by yourself — is noticing the small things. The detail in India is extraordinary, in the way people dress, the way people store their things and mend things, and the paradoxes: nothing is quite as it seems. So, intellectually, mentally, it’s this constantly fascinating display of language and architecture and objects and craft. It’s all around you. Your senses are constantly being bombarded with little details, which is fantastic"

இடம் : கோனார்க், ஒரிசா

நன்றி : New York Times

Wednesday, January 16, 2008

பூமியின் பிராகாசம்!!!


சூரியனால் உண்டாக்கப்பட்ட பிராகாசத்தால் ஒரு மெல்லிய பிறை போன்ற தோற்றம் பூமியின் அண்டர்டிக்கா பகுதியில் தெரிகிறது.
நாஸாவால் அனுப்பட்ட "Rosetta (ரோசாட்டா)" விண்கலம் தன்னுடைய நீண்ட பயண பாதையில் பூமியை கடக்கும் பொழுது எடுக்கப்பட்ட படம்.
"Rosetta (ரோசாட்டா)" தன்னுடைய பயண முடிவில் 67P என்ற வால் நட்சத்திரத்தின் நிள் வெளிபாதையில் ஐக்கியமாகி, அதன் சூரிய பயணத்தில் தன்னையும் இணைத்துகொள்ளும்...
இடம் : அண்டவெளி
நன்றி : ESA, MPS for OSIRIS Team

Tuesday, January 15, 2008

கராச்சி மீனவர்கள்...


கராச்சியில் உள்ள மீனவர்கள் மிக மோசமான சுகாதாரமற்ற இடத்தில் த்ங்களுடைய வாழ்க்கையை வாழ்கின்றனார். பாகிஸ்தான் அரசின் இந்த கவனக்குறைவால் பல மீனவர்கள் தொற்று நோய்களால் அவதிபடுகின்றனர்.
இந்த நிலையிலும் தவறாது த்ங்களுடைய மதக்கடமை நிறைவேற்றுகின்றனர்.
இடம் : கராச்சி படகுத்துறை

Monday, January 14, 2008

நீங்க ரெடியா ?


பனி சறுக்கு கற்றுகொள்ள வரிசையாக நிற்கும் மழலை கூட்டம்... ஸ்டிவ்(Steve) பயிற்ச்சி ஆசிரியர், குழந்தைகளின் தற்காப்பு உடைகளை சரி செய்கிறார்.
இடம் : காப்பர் மலை(Copper Mountain), கொலராடோ

Thursday, January 10, 2008

புதிய மக்கள் வாகனம்......


டாடா......

இந்தியாவின் முன்னோற்றத்துக்கு தோளோடு தோள் நின்று வளர்ச்சி பாதைக்கு அடிதளம் இட்ட நிறுவனம், உலகத்தை இந்தியாவின் பக்கம் திரும்பி பார்கவைத்த நிறுவனம். தற்போது உலகிலே மிக மலிவான காரை அறிமுகபடுத்தி உள்ளது...... இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு மைல் கல்..

Wednesday, January 9, 2008

மார்கொ பிட்ட்ச்


ஆண்டுதோறும் நியுயார்க் நகரில் நடக்கும் பாலட் திருவிழா "The Nutcracker" .
மார்கொ பிட்ட்ச், 9, நடனத்துக்கு தன்னை தயார் செய்து கொள்கிறாள்.
இடம் : நியுயார்க்

Tuesday, January 8, 2008

ஹு ஜிண்டோ..


ஹு ஜிண்டோ, மக்கள் ஜனநாயக சீனாவின் அதிபராக 2002 லிரிந்து பதவி வகித்து வருகிறார்.இவருடைய ஆட்சியின் கீழ், சீனாவின் வளர்ச்சி மற்ற வல்லரசுகளுக்கு சாவலாக உள்ளது.

Monday, January 7, 2008

கிரிக்கெட் ?


எது எப்படி சொன்னாலும், இந்தியா தோல்வி அடைந்தது.... இது மறுக்க முடியாத உண்மை....ஆனால் மறக்க முடியாத ஆட்டம்.
வேறு என்ன சொல்ல ?

Sunday, January 6, 2008

யார் அதிபர் ?


அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபமா (Obama)

"என் பின்னால் அமெரிக்கர்கள் இருந்தல், எனக்கு பயம் இல்லை..."


இடம் : நியு ஹம்சியர் (New Hampshire)

Saturday, January 5, 2008

வாழ்விழந்த நகரம்...


இத்தாலியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றாத்தால், இத்தாலி பல சோதனைகளை சந்தித்து வருகிறது...
இடம் : -டொல்செ, இத்தாலி

Friday, January 4, 2008

வாழ்த்துகள் Mars Exploration Rover Spirit


வாழ்த்துகள் "Mars Exploration Rover Spirit ".


நாஸா(NASA)வால் செலுதப்பட்ட இந்த குட்டி இயந்திரம் 04 Jan 2004 (யுனிவெர்சல் டைம்) ZULU, அன்று செவ்வாய் கிரகத்தை அடைந்தது, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் அங்கு பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துவருகிறது.

இந்த குட்டி இயந்திரம் தன்னுடைய குறிபிட்ட வாழ் நாளைகாட்டிலும் அதிக நாட்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்து பல்வேறு புகை படங்கள் எடுத்து பூமிக்கு அனுப்பி கொண்டு இருகிறது. நீங்கள் பார்பது,செவ்வாய் கிரகத்தில் உளள் "கணவன் மலை"

இடம் : Husband HIll,Mars


Thursday, January 3, 2008

இது நடனம் அல்ல...


பாபூன் (குரங்கு) இது நடனம் அல்ல, இந்த நீருக்கு அடியில் உள்ள அபாயத்தை பார்தவாறு நடந்து செல்லும் குரங்கு.....


பாபூன், குரங்குகள் எப்பொழிதூம் கூட்டமாக இருகும், சமூகவியல் அறிஞர்கள் இந்த் குரங்குகளின் வாழ்க்கை முறையில் இருந்து மனித பரிணாம வளைர்சியை ஆராய்ச்சி செய்கிறார்கள்..



இடம் : Moremi Game Reserve in Botswana


Wednesday, January 2, 2008

ஏமான் வாழ்கை...


ஒரு மாலை நேர பொழுதில், தேனிர் கடையில் தேனிர் பருகி பொழுதை கழிக்கும் ஏமானியார்கள்...

Tuesday, January 1, 2008

வெண்மை இல்லை பகைமை ?


நான் எதிரி இல்லை என கூறும் ஈராக் சிறுவன்...கையில் வெள்ளை கொடியுடன்....